Saturday, March 20, 2010

வெற்றி !!

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது அல்ல;

உனக்கு வெற்றி அடுத்தவனுக்கு தோல்வி !
அடுத்தவனுக்கு வெற்றி உனக்கு தோல்வி !

உங்கள் வெற்றியை விட்டு கொடுத்து பாருங்கள் மற்றவனுக்கு!
அவனுக்கும் வெற்றி !! உங்களுக்கும் வெற்றி !! மனதளவில்..

பணம் !!

பணம் வாழ்க்கைக்கு தேவை ! பணம் மனிதன் என்னும் உயிர்க்கு பிறப்பு முதல் இறப்பு வரை தேவை ! இறந்த பின்னும் சுடு காடு வரை கூட தேவைப் படுகிறது !!
இருந்தாலும் பணத்தால் சில விஷயம் கஷ்டம், அது தூக்கம், மன அமைதி , தாயின் பாசம் , கடவுளின் கருணை. இது போல சிலது பணத்தால் முடியாது......

ரகசியம் !!

ரகசியம் அப்படி என்றால் என்ன ? நீ என் மனதோடு இருந்தால் அது ரகசியம்!! இன்னொரு மனதோடு பகிர்ந்து கொண்டால் அது வெறும் பேச்சு !!!

Tuesday, February 16, 2010

கடவுள் !!

கடவுள் நம் கண்களுக்குத் தெரிவது இல்லை ஆனால்
நாம் கடவுளின் கண்களில் இருந்து தப்புவது இல்லை !

கடவுளைப் பார்த்தேன் என்பவர் சிலர்
கடவுளைப் பார்க்க நினைப்பவர் பலர் !

கடவுள் இல்லை என்பவர் சிலர்
கடவுள் இருக்கிறார் என்பவர் பலர்!

மனிதா நீ கடவுள் இல்லை என்றாலும், இருக்கிறார் என்றாலும்
கடவுள் உன்னை சரி சமமாக தான் நடத்துவார், கருணைப் புரிவார் ஒரு தாயை போல் !!

ஒரு தாய் தன் பிள்ளையை நல்லவன், கெட்டவன் என்று எப்படி பார்ப்பது இல்லையோ
அதே போல் தான் கடவுளும் !

ஏன் என்றால் நாம் எல்லோரும் அவருடைய பிள்ளைகள்!!

இதற்காக தான் தாயை தெய்வம் என்று சொல்லுகிறார்கள் போலும் !!

எனவே கடவுளையும் , தாயையும் என்றும் மறவாமல் வணங்கு! போற்று !!

Friday, February 12, 2010

படிப்பு !!

படிப்பு தான் மனிதனை மனிதனாக்கும்
படிப்பு இல்லாதவன் மூடன் என்று சொல்லுவார்கள் !

சிறு வயதில் படித்தால் மட்டுமே
வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரமுடியும் !

சிறு வயதில் படிக்கச் தவறியவர்கள் இப்பொழுது
எப்பொழுது வேண்டும் நாளும் படித்து கொள்ளும் வசதி தான் தொலைதூரக் கல்வி

எனவே எல்லோரும் படிங்க முன்னேறுங்க ....
படிக்காத மேதை நிறையப் பேர் அப்போ இருந்தாங்க ஆனால்
படித்தால் மட்டுமே இந்த காலத்தில் நிலைக்க முடியும்!!

படித்த சிந்தனை துளிகள்

மனம் !!

எது புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனமே! உன்னை நானும் , என்னை நீயும் புரிந்து கொள்ள வேண்டும் ; இல்லா விட்டால் மனமே நீ தறி கெட்டுப் போவாய் , நான் தடம் புரண்டு போவேன் !!!

நிம்மதி !!

எதன் மீது சந்தேகம் வந்தாலும் நிம்மதி பாழாகிறது.
மனைவியானாலும் சரி மகேஷ்வர் ஆனாலும் சரி
எது பிடிக்க வில்லையோ அதில் இருந்து ஒதுங்கி விடு
தினமும் சந்தேகப்பட்டு நம்பிக்கை இல்லாமல் உன்
உடம்பையும், மனத்தையும், நிம்மதியும் கெடுத்து கொள்ளாதே !!