Saturday, March 20, 2010

வெற்றி !!

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது அல்ல;

உனக்கு வெற்றி அடுத்தவனுக்கு தோல்வி !
அடுத்தவனுக்கு வெற்றி உனக்கு தோல்வி !

உங்கள் வெற்றியை விட்டு கொடுத்து பாருங்கள் மற்றவனுக்கு!
அவனுக்கும் வெற்றி !! உங்களுக்கும் வெற்றி !! மனதளவில்..

பணம் !!

பணம் வாழ்க்கைக்கு தேவை ! பணம் மனிதன் என்னும் உயிர்க்கு பிறப்பு முதல் இறப்பு வரை தேவை ! இறந்த பின்னும் சுடு காடு வரை கூட தேவைப் படுகிறது !!
இருந்தாலும் பணத்தால் சில விஷயம் கஷ்டம், அது தூக்கம், மன அமைதி , தாயின் பாசம் , கடவுளின் கருணை. இது போல சிலது பணத்தால் முடியாது......

ரகசியம் !!

ரகசியம் அப்படி என்றால் என்ன ? நீ என் மனதோடு இருந்தால் அது ரகசியம்!! இன்னொரு மனதோடு பகிர்ந்து கொண்டால் அது வெறும் பேச்சு !!!