கடவுள் !!
கடவுள் நம் கண்களுக்குத் தெரிவது இல்லை ஆனால்
நாம் கடவுளின் கண்களில் இருந்து தப்புவது இல்லை !
கடவுளைப் பார்த்தேன் என்பவர் சிலர்
கடவுளைப் பார்க்க நினைப்பவர் பலர் !
கடவுள் இல்லை என்பவர் சிலர்
கடவுள் இருக்கிறார் என்பவர் பலர்!
மனிதா நீ கடவுள் இல்லை என்றாலும், இருக்கிறார் என்றாலும்
கடவுள் உன்னை சரி சமமாக தான் நடத்துவார், கருணைப் புரிவார் ஒரு தாயை போல் !!
ஒரு தாய் தன் பிள்ளையை நல்லவன், கெட்டவன் என்று எப்படி பார்ப்பது இல்லையோ
அதே போல் தான் கடவுளும் !
ஏன் என்றால் நாம் எல்லோரும் அவருடைய பிள்ளைகள்!!
இதற்காக தான் தாயை தெய்வம் என்று சொல்லுகிறார்கள் போலும் !!
எனவே கடவுளையும் , தாயையும் என்றும் மறவாமல் வணங்கு! போற்று !!